Read in English
This Article is From Mar 27, 2020

சீனா-அமெரிக்கா இடையிலான ‘கொரோனா பனிப் போருக்கு’ முற்றுப்புள்ளி- வாய் திறந்த அதிபர் ஜின்பிங்!!

Coronavirus Updates: சீனாவில் இருப்பதை விட, அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான நோயாளிகள் அதிகம் உள்ளனர்

Advertisement
உலகம் Edited by

Coronavirus: இதுவரை அமெரிக்காவில் 82,400 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Highlights

  • கொரோனா தொற்றில் சீனாவை முந்தியது அமெரிக்கா
  • அமெரிக்காவில் தற்போது 80,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு
  • ஷி - டிரம்ப் இன்று தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்
Beijing:

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளதாக, சீன அரசின் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான சிசிடிவி, “சீனா, கொரோனா வைரஸ் தொடர்பான அனுபவங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவே உள்ளது என்று அதிபர் ஷி கூறியுள்ளார்” எனக் குறிப்பிடுகிறது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்' என்று சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தது சீன அரசுத் தரப்பு. இந்நிலையில்தான் வார்த்தைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு நாட்டு அதிபர்களும் கலந்துரையாடியுள்ளனர். சீனாவின், உஹான் நகரத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அமெரிக்கா, ‘சீன வைரஸ்' என கொரோனாவுக்கு முத்திரைக் குத்தியதைத் தொடர்ந்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “அமெரிக்க ராணுவம், சீனாவுக்கு கொரோனா வைரஸைக் கொண்டு வந்திருக்கலாம்,” என்கு கூறி அதிர்ச்சி கொடுத்தார். 

சீனாவில் இருப்பதை விட, அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான நோயாளிகள் அதிகம் உள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 82,400 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

உரையாடலின்போது அதிபர் ஷி, “அமெரிக்க சீன நட்புறவு என்பது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த சூழலில் ஒத்துழைத்து நடந்து கொள்வதுதான் இருவருக்கும் பயனளிக்கும். 

இரு நாட்டு உறவையும் மேம்படுத்த அமெரிக்காவும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இருவரும் இணைந்து இந்த வைரஸ் பரவலைத் தடுப்போம்,” எனக் கூறியுள்ளதாக சிசிடிவி தெரிவித்துள்ளது. 

Advertisement