This Article is From Mar 30, 2020

லாக்டவுன் நேரத்தில் இது உங்களுக்கு பயன்படும்: வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி

கடந்த ஆண்டு, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமரின் அனிமேஷன் பதிப்பைக் கொண்ட காணொளிகளை அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் இது உங்களுக்கு பயன்படும்: வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி

கடைசியாகப் பங்கேற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தன்னிடம் உடற்பயிற்சி வழக்கத்தினைப் பற்றி ஒருவர் கேட்டதால் இந்த காணொளியைப் பகிர்ந்திருக்கிறார் பிரதமர்

New Delhi:

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, தேசிய அளவில் முழு முடக்கக் கட்டுப்பாடு அமலில் இருக்கின்றது. இதனால் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், இவ்வாறான காலகட்டங்களில் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் மோடி, பதிலளிக்கும் வகையில் அனிமேஷன் காணொளி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இதில் குறிப்பிட்டுள்ள யோகாசனங்கள் தனக்கு பெரிதும் பயன்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

கடைசியாகப் பங்கேற்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தன்னிடம் உடற்பயிற்சி வழக்கத்தினைப் பற்றி ஒருவர் கேட்டதால் இந்த காணொளியைப் பகிர்ந்திருக்கின்றேன். இதனைக் கண்ட பின்பு நீங்களும் யோகா பயிற்சியை மேற்கொள்வீர்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் ஒரு உடற்பயிற்சி நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ அல்ல. இந்த யோகா பயிற்சிகளை நான் என்னுடைய வாழ்க்கையில் பல காலமாகப் பின்பற்றிவருகின்றேன். இது எனக்கு நல்ல பலனையும் கொடுத்திருக்கின்றது. இது போன்ற பல பயிற்சிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதனை பகிருங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்பும் மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

சிலர் இந்த நாட்களில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதையும், கேரம்,வீடியோ கேம், கிரிக்கெட்,சமையல் கலை, தோட்டக்கலை, மெழுகுவர்த்தி தயாரித்தல், மற்றும் வாசித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டதாகக் கூறியிருந்தார். தபேலா மற்றும் வீணை கொண்டு பயிற்சி செய்வதை சமூக வலைத்தளத்தில் தான் அதிகம் கண்டதாகவும், இதனால் மக்கள் வெளியில் செல்லாமல், தங்களுக்கு உள்ளே உள்ள திறமையை அடையாளம் காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் பகிர்ந்த காணொளி மக்களுக்கு இந்த 21 நாட்களில் பயன்படும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமரின் அனிமேஷன் பதிப்பைக் கொண்ட காணொளிகளை அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.