This Article is From Mar 26, 2020

Coronavirus Pandemic: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

"கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது"

Coronavirus Pandemic: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Prince Charles is displaying mild symptoms of COVID-19. (File)

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், "கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது. மற்றபடி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்," எனச் செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இளவரசர் சார்லஸின் மனைவியான கமிலியாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இருவரும் தனித் தனியாக ஸ்காட்லாந்தில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் உள்ளனர். 

“கொரோனா குறித்த அறிகுறிகள் இளவரசர் சார்லஸுக்கு இருந்த போதிலும், கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலிருந்தபடியே தன் பணிகளைச் செய்து வருகிறார். 

கோர்ன்வால் டச்சஸான கமிலியாவுக்கும் கொரோனா குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து அரசு கொடுத்த அறிவுரையின்படி இருவரும் தனித் தனியே இருக்கின்றனர். 

கடந்த சில வாரங்களாக இளவரசர் சார்லஸ் பலரைச் சந்தித்ததனால், யாரிடமிருந்து இந்த தொற்று அவருக்கு வந்தது என்பதை கண்டறிய முடியவில்லை,” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி, ராணி இரண்டாம் எலிசபெத், 93, மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப், 98, ஆகியோர் லண்டனுக்கு வெளியில் உள்ள வின்ஸ்டோர் கோட்டைக்குச் சென்று ஓய்வெடுத்து வருகின்றனர். 

இங்கிலாந்தில் இதுவரை 8,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 422 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

.