Read in English
This Article is From Mar 23, 2020

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது வருத்தம்தான்: டிரம்ப் கருத்து!

“சீனா மீது எனக்கு சிறிய வருத்தம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன்…"

Advertisement
உலகம் Edited by

"ஆனால், கொரோனா விவகாரத்தில் அவர்கள் மீது எனக்கு வருத்தம்தான்."

Highlights

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • சீனாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது
  • அமெரிக்காவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது
Washington:

கொரோனா வைரஸ் நெருக்கடியால் உலகமே தத்தளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா மீது வருத்தம்தான் என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசும்போது, “சீனா மீது எனக்குச் சிறிய வருத்தம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன்… நான் சீனாவை மதிக்கிறேன். 

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மதிக்கிறேன். ஆனால், கொரோனா விவகாரத்தில் அவர்கள் மீது எனக்கு வருத்தம்தான். எங்களிடம் அது குறித்து அவர்கள் தகவல்களைப் பரிமாறியிருக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார். 

Advertisement