நாட்டில் 80க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Kohima, Nagaland: கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், சுவாச கவசம் அணியாமல் மக்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாதென்று நாகலாந்து அரசு அதிரடி உத்தரவை போட்டுள்ளது. இதுவரை மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளில் இது சற்று கடுமையானதாக பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, பொது இடங்களில் கைகளை கழுவும் சோப்பு மற்றும் சானிட்டைசர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி பல்வேறு நாடுகள் செயலாற்றி வருகின்றன.
இந்தியாவில், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை மக்கள் பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் 80க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கலபுராகியில் 76 வயது முதியவரும், நேற்று டெல்லியில் 68 வயதான பெண்ணும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.