हिंदी में पढ़ें
This Article is From May 20, 2020

கொரோனாவால் 6 கோடி மக்கள் ’கடும் வறுமைக்கு’ தள்ளப்படுவார்கள்: உலக வங்கி எச்சரிக்கை!

அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டின் கீழ், உலக வங்கியானது ஏற்கனவே 100 நாடுகளுக்கு உதவி திட்டங்களுக்கு நிதியளித்து வருகிறது.

Advertisement
உலகம்

கொரோனாவால் 6 கோடி மக்கள் ’கடும் வறுமைக்கு’ தள்ளப்படுவார்கள்: உலக வங்கி எச்சரிக்கை!

Highlights

  • கொரோனாவால் 6 கோடி மக்கள் ’கடும் வறுமைக்கு’ தள்ளப்படுவார்கள்
  • இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஐந்து சதவீதம் குறைவாகும்
  • உலகளவில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Washington:

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வருமானத்தை துடைத்து, சுமார் 6 கோடி மக்களை கடுமையான வறுமைக்கு தள்ளும் வகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறும்போது, அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டின் கீழ், உலக வங்கியானது ஏற்கனவே 100 நாடுகளுக்கு உதவி திட்டங்களுக்கு நிதியளித்து வருகிறது.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஐந்து சதவீதம் குறைவாகும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. இது ஏழ்மையான நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எங்கள் மதிப்பீடு என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களையும் அழித்து, 6 கோடி மக்கள் வரை கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றார். 

Advertisement

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலாக தோன்றிய இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை, உலக வங்கி 5.5 பில்லியன் டாலர்களை ஏழை நாடுகளில் சமூக சேவைகளுக்காகவும், சிக்கலான சுகாதார அமைப்புகள், பொருளாதாரங்களை மேம்படுத்தவும் செலவிட்டுள்ளது.

Advertisement

ஆனால் உலக வங்கியின் முயற்சிகள் மட்டும் போதுமானதாக இல்லை என்று மால்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நீடித்த மீட்சியை உறுதி செய்வதற்காக ஏழை நாடுகளுக்கு இருதரப்பு உதவியை முடுக்கிவிடுமாறு நன்கொடை நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Advertisement