Read in English
This Article is From May 27, 2020

கேரளாவில் தனிமைப்படுத்தலுக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்: பினராயி விஜயன்

லட்சக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு வருகை தருகிறார்கள், அவர்கள் அனைவரின் கட்டணங்களையும் அரசால் ஏற்க முடியாது.

Advertisement
Kerala Edited by

கேரளாவில் இதுவரை 896 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். (File)

Thiruvananthapuram:

கேரளாவில் நிறுவன தனிமைப்படுத்தலை ஏற்படுத்தி தர முடியவில்லை என்றும், லட்சக்கணக்கான மக்கள் மாநிலத்திற்கு வருகை தருவதால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் கூறியதாவது, மாநிலத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, பல்வேறு வரம்புகளில் கட்டணங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கேரள அரசால் அனைத்து மக்களுக்குமான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் பினராயி தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும், "லட்சக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு வருகை தருகிறார்கள், அவர்கள் அனைவரின் கட்டணங்களையும் அரசால் ஏற்க முடியாது. அதனால், நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ள அனைத்து மக்களும் செலுத்த வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கேரளாவில் இதுவரை 896 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement