இந்த மாத தொடக்கத்தில் இருந்து தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஓப்போ நிறுவனம் மீண்டும் தொடங்கியது. (Representational)
ஹைலைட்ஸ்
- ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- டெல்லியில் தொழிற்சாலையை மூடிய ஓப்போ நிறுவனம்
- 3000க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை
New Delhi: ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொபைல் போன் நிறுவனமான ஓப்போ டெல்லியில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.
இதுதொடர்பாக ஓப்போ இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் அமைப்பாக, நொய்டாவில் உள்ள எங்கள் உற்பத்தி ஆலையில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஓப்போ நிறுவனம் மீண்டும் தொடங்கியது.