This Article is From Mar 11, 2020

''மே 24-ம்தேதி வரை ஐ.பி.எல். நடத்த அனுமதிக்கக் கூடாது'' - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஐ.பி.எல். நடைபெறும் தேதி குறித்த அட்டவணையை இன்னும் வெளியிடாமல் உள்ளது.

''மே 24-ம்தேதி வரை ஐ.பி.எல். நடத்த அனுமதிக்கக் கூடாது'' - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • பொதுமக்கள் கூடுவதால் கொரோனா பரவும் என தகவல்
  • கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல்.யை ஒத்தி வைக்க கோரிக்கை
  • நாளை வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, ஐ.பி.எல். போட்டிகளை மே 24-ம்தேதி வரையில் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டிகளை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா வைரசும் உலகம் முழுவதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

பொது இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால், கொரோனா எளிதாகப் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. 

இதையடுத்து, உலக நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூடுவதைக் கூடுமானவரையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஐ.பி.எல். நடைபெறும் தேதி குறித்த அட்டவணையை இன்னும் வெளியிடாமல் உள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், கொரோனா பரவி வருவதால் மார்ச் 29 முதல் மே 24 வரையில் ஐ.பி.எல். போட்டிகளை பிசிசிஐ நடத்தக்கூடாது. இதற்கான உத்தரவை மத்திய அரசுக்குப் பிறப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய சுகாதாரத்துறையின் சிறப்புச் செயலர் சஞ்சீவ குமார் அளித்துள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். 

.