கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
New Delhi: கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இத்தோடு, கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து ஏழாவது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அன்லாக் 3 அல்லது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுபாடுகளை மூன்றாவது முறையாக தளர்த்தியதற்கு பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்றது.
காலை 11 மணி அளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத், உத்தர் பிரதேசம், தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றார்கள்.
நேற்றைய தினம் வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடி, அசாம், பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகியுள்ளது.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 53,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,68,675 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.