This Article is From Jun 26, 2020

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமே மருந்து: பிரதமர் மோடி

மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அவர் கூறியுள்ளார். 

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமே மருந்து: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமே மருந்து: பிரதமர் மோடி

New Delhi:

கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமும், சமூக இடைவெளியுமே ஒரே மருந்து என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உள்ளூர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை சங்கங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் "ஆத்மா நிர்பர் உத்தரபிரதேசம் ரோஸ்கர் அபியான்" என்ற திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம், உத்தரபிரதேசத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமவாசிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசத்தால் வாயை மூடுவது, மற்றும் மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அவர் கூறினார். 

மேலும், முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை தனது சால்வையின் மூலம் செய்து காட்டுவதாகவும் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் உத்தர பிரதேச அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், அந்த மாநிலத்தின் மக்கள்தொகை அளவானது இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 1,30,000 உயிரிழப்புகளைக் கண்ட நான்கு நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த நாடுகள் ஒரு காலத்தில் உலகை வென்றன, உலகின் மிகப்பெரிய சக்திகளாக இருந்தன, ஆனால் இந்த நாடுகளின் மக்கள்தொகையை சேர்த்து பார்த்தால், அது 24 கோடியாகிறது. ஆனால் இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 24 கோடி மக்கள் உள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நான்கு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்து 1,30,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதிலிருந்து உத்தர பிரதேச அரசு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் காணலாம். உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பு 600ஆக தான் உள்ளது. இதன் மூலம் உத்தர பிரதேச அரசு இந்த பிரச்னையை விரைவாகவும், திறமையாகவும் கையாண்டு வருவதை காட்டுகிறது என்று அவர் கூறினார். 

எனினும், மரணம் என்பது மரணம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த இடத்திலோ, உயிர்களை இழப்பது என்பது வருத்தமான ஒன்றாகதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.