This Article is From Mar 15, 2020

”ஆரோக்கியமான உலகத்திற்கான சரியான நேரத்தில் நடவடிக்கை”: சார்க் வீடியோ அழைப்பில் பிரதமர் மோடி

பொது நன்மைக்காக ஒன்று சேருங்கள்! 15 மார்ச், 1700 IST. பிராந்தியத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான பொதுவான நடைமுறை யுக்தியை உருவாக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருக்கின்றது

Advertisement
இந்தியா

Coronavirus: PM Modi will participate in a video conference with other SAARC nations today.

New Delhi :

நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளுடனான தனது வீடியோ மாநாட்டிற்கு முன்னதாக குறிப்பிட்டிருந்தார். உலகளவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பினை உருவாக்கினார். இந்த நோய் தொற்று மூலம் சர்வதேச அளவில் 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சார்க் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதாகப் பிரதமர் மோடி கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ மாநாடு வருகிறது.

"ஒரு ஆரோக்கியமான கிரகத்திற்கான சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, சார்க் நாடுகளின் தலைவர்கள், மாநாடு மூலம், கொரோனா வைரஸின் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தினை விவாதிப்பார்கள்" என்று பிரதமர் மோடி சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

"நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும். இது எங்கள் குடிமக்களுக்கும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்) உறுப்பினர்களாக உள்ளன.

குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வீடியோ கான்பரன்சிங் வழிகள் மூலம் தலைவர்கள் கலந்துரையாடலாம் என்று வெள்ளிக்கிழமை ட்வீட் செய்ததில் பிரதமர் கூறியிருந்தார்.

Advertisement

"சார்க் நாடுகளின் தலைமையானது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான நடைமுறை யுக்தியை முன்வைக்க வேண்டும் என்று நான் முன்மொழிய விரும்புகிறேன். வீடியோ கான்பரன்சிங் மூலம், எங்கள் குடிமக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகளை நாங்கள் விவாதிக்க முடியும்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.

உலக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கும் தெற்காசியா, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் மோடியின் அழைப்பு சார்க் உறுப்பு நாடுகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது, பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமையன்று "உலக மற்றும் பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகளின்" அவசியத்தை ஒப்புக் கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சுகாதார விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்.

இந்த முயற்சிக்குப் பிரதமர் மோடிக்கு பூட்டான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்சே ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

பொது நன்மைக்காக ஒன்று சேருங்கள்! 15 மார்ச், 1700 IST. பிராந்தியத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான பொதுவான நடைமுறை யுக்தியை உருவாக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. சார்க் நாடுகளின் வீடியோ மாநாட்டு அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்துவார். என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சனிக்கிழமை மாலை ட்வீட் செய்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, சார்க் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 126  ஆக உள்ளது. பாகிஸ்தானில் இதன் எண்ணிக்கை  20 ஆக உள்ளது.

Advertisement

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் - 68 வயதான பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார், 76 வயதான ஒருவர் வியாழக்கிழமை இறந்தார். இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோய்த் தொற்றினை எதிர்த்து இந்திய அரசு பல்வேறு உள் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

சர்வதேச போக்குவரத்துக்கு 37 எல்லை சோதனைச் சாவடிகளில் 18 ஐ மூடுவது மற்றும் தற்போதுள்ள அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைப்பது - ஐ.நா மற்றும் இராஜதந்திரம் போன்ற சில வகைகளைத் தவிர - ஏப்ரல் 15 வரை. வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் வெளி நாடுகளிலிருந்து திரும்பும்போது 14 நாள் தனிமைப்படுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்ற பொது இடங்களை மூடுவதோடு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது குறித்து பல்வேறு மாநில அரசுகள் முடிவினை மேற்கொண்டுள்ளன. சனிக்கிழமையன்று, முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், பெங்களூரு அலுவலகத்தைத் தற்காலிகமாக மூடுவதாகவும், சந்தேகத்திற்குரிய COVID-19 தொற்றின் பின்னர் வளாகத்தைச் சுத்தம் செய்வதாகவும் அறிவித்தது.

COVID-19 தொற்று பரவல் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஒரு சந்தையில் தொடங்கியது. உலக சுகாதார நிறுவனம் இந்த பரவலை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது, அதாவது இது உலகம் முழுவதும் பரவி ஏராளமான மக்களைப் பாதித்துள்ளது.

Advertisement