This Article is From Jun 19, 2020

கொரோனா பாதித்த எம்எல்ஏ! பாதுகாப்பு ஆடைகளுடன் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்களித்தார்

10 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது.  குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

கொரோனா பாதித்த எம்எல்ஏ! பாதுகாப்பு ஆடைகளுடன் மாநிலங்களவை எம்.பி.  தேர்தலில் வாக்களித்தார்

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.  

ஹைலைட்ஸ்

  • 10 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது
  • 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படவுள்ளன
  • குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையே போட்டி
Bhopal:

உயிரைப் பறித்து வரும் கொரோனா வைரஸால், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மத்திய பிரதேச எம்எல்ஏ குணால் சவுத்ரி வாக்களிப்பதை தடுக்க முடியவில்லை. அவர் பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்து விட்டுச் சென்றார்.

நாடு முழுவதும் 24 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.  மத்திய பிரதேசத்திலும் இதற்காக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் சவுத்ரி, தனிநபர் பாதுகாப்பு கவசங்களை அணிந்து வாக்களித்தார். 

அவருக்கு முன்பாக 205 எம்எல்ஏக்கள் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். தனிநபர் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த அவர், கையில் ஒரேயொரு மொபைலை மட்டும் வைத்திருந்தார். அவர் வந்ததும், அங்கிருந்தவர்கள் அனைவரும் தனி நபர் இடைவெளியை தீவிரமாக கடைபிடித்தனர்.

எம்எல்ஏ குணால் சவுத்ரி தும்மினாலோ, இருமினாலோ அதிலிருந்து கொரோனா பரவி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6-ம் தேதியில் இருந்து  அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தது. அதன்பின்னர் சோதனை நடத்தப்பட்டதில் ஜூன் 12-ம்தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

குணால் சவுத்ரி மதியம் சரியாக 12.45 க்கு ஆம்புலன்சில் வந்திறங்கி வாக்களித்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்ததாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.  

இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்ட அவரை எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று பாஜக தலைவர் ஹிதேஷ் பாஜ்பாய், தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியுள்ளார். 

10 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தல் நடக்கிறது.  குஜராத், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.  

.