This Article is From Jul 10, 2020

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று..! போனில் அழைத்த ஸ்டாலின், பின்னர் ஓர் எச்சரிக்கை!!

"எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!”

Advertisement
தமிழ்நாடு Written by

மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.

Highlights

  • மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ
  • மதுரையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
  • போன் மூலம் அழைத்துப் பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மதுரையை சொந்த ஊராக கொண்டவர் செல்லூர் ராஜூ. கடந்த சில நாட்களாக மதுரையில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 

இந்நிலையில், செல்லூர் ராஜூவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்.

Advertisement

எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார். 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசனும், “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் விரைவில் நலம்பெற்றுத்திரும்ப விழைகிறேன்.” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

Advertisement
Advertisement