கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது; மோடி அரசை காணவில்லை: ராகுல் சாடல்! (File)
New Delhi: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை மீண்டும் நினைவுபடுத்தி அரசை விமர்சித்துள்ளார்.
அதில், நோய்தொற்றை கையாளும் அரசை கடுமையாக சாடிய அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது, மோடி அரசை காணவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை 17ம் தேதியன்று நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்திருந்த நிலையில், ஆக.10ம் தேதிக்குள் நாட்டில் அடுத்த 10 லட்சம் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று காலை தனது ட்விட்டர் பதிவில், தனது பழைய ட்விட்டை நினைவு கூர்ந்துள்ளார். அதில், நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு எணிணிக்கை பதிவாகி வந்தால், வரும் ஆக.10ம் தேதிக்குள் 20 லட்சத்தை அடைந்துவிடுவோம். அதனால், அரசு நோய்தொற்றை கையாள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அந்த பதிவை பகிர்ந்துள்ளார்.