This Article is From Aug 04, 2020

5 நாட்களில் 2.7 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள்; சரியான முடிவு குறித்து ராகுல் விமர்சனம்

18 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்களில் 2.7 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள்; சரியான முடிவு குறித்து ராகுல் விமர்சனம்

கோவிட் நெருக்கடியை பிரதமர் மோடி கையாளுவது குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 18 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், கோவிட் நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது மீண்டும் அரசாங்கத்தின் மீதான தனது விமர்சனத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலக நாடுகளில் அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாதான் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி ஒரு புள்ளிவிவரத்தினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டதால் இந்தியா மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி கூறிய கூற்றினை மேற்கோளிட்டு ராகுல் காந்தி கொரோனா புள்ளிவிவரத்தினை பகிர்ந்துள்ளார்.

ஜூலை 28 அன்று, பிரதமர் மேற்கண்ட கூற்றினை தெரிவித்திருந்தார். அதுவரை நாள் முழுவதும் ஏறத்தாழ 45 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டனர். ஆனால், ஜூலை 30 முதல் இந்த எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை எட்டியுள்ளது.

பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதே போன்ற கருத்தினை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு அன்லாக் 3-ம் கட்டத்தின் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தளர்வுகள் பல அளிக்கப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்தும், அதன் மூலம் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்தும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

18 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.