This Article is From Apr 21, 2020

'கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யுங்கள்' - ராகுல்

சானிட்டைசர்கள், திரவ ஹேண்ட் வாஷ், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பர்னீச்சர், படுக்கைகள், பரிசோதனை டேபிள்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

Advertisement
இந்தியா

பரிசோதனை கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பு மருந்துகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. 

Highlights

  • கொரோனா எதிர்ப்பு பொருட்களுக்கு GST ரத்து செய்ய ராகுல் காந்தி கோரிக்கை
  • முக கவசம், சானிட்டைசர், சோப்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன
  • 5 முதல் 18 சதவீத GST வரி விதிக்கப்பட்டு வருகிறது
New Delhi:

கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துக்கும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாட்டில் மே 3-ம்தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டில் டெஸ்டிங் கருவிகளை தவிர்த்து சீனாவிடம் இருந்தும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

சானிட்டைசர்கள், சோப், மாஸ்க்குகளுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தவறானதாகும். இந்த சிக்கலான தருணத்தில் கொரோனா எதிர்ப்புக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும். 

Advertisement

இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நோயுடன் போராடும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவார்கள். எனவே ஜி.எஸ்.டி. வரியை கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு நீக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சானிட்டைசர்கள், திரவ ஹேண்ட் வாஷ், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பர்னீச்சர், படுக்கைகள், பரிசோதனை டேபிள்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

Advertisement

ரத்த பரிசோதனை செய்யும் அட்டைகள், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி.யும், மாஸ்க்குகள், பரிசோதனை கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பு மருந்துகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement