Read in English
This Article is From Aug 04, 2020

’கோவிட் கறி, மாஸ்க் நான்’: வாடிக்கையாளர்கள் அச்சத்தை போக்க உணவகத்தின் புதிய முயற்சி!

கோவிட் கறியில், கூடுதலாக மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன.

Advertisement
இந்தியா

’கோவிட் கறி, மாஸ்க் நான்’: வாடிக்கையாளர்கள் அச்சத்தை போக்க உணவகத்தின் புதிய முயற்சி!

Jodhpur:

கொரோனா தொற்று காலத்தில் உணவகங்களில் சாப்பிட அச்சமடைந்துள்ள வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கும் புதிய முயற்சியாக ராஜஸ்தானில் உணவகம் ஒன்று 'கோவிட் கறி, மற்றும் மாஸ்க் நான்'வகை உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அந்த சைவ உணவகத்தின் உரிமையாளர் யாஷ் சோலாங்கி கூறும்போது, இது எங்களுக்கும், எங்கள் ஒட்டுமொத்த துறையினருக்குமே மிகவும் கடினமான காலமாக உள்ளது என்றார். 

லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், மக்கள் மத்தியில் இன்னும் பயம் போகவில்லை. அதனால், வெளியில் சாப்பிடவும் மக்கள் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். 

இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த புதிய உணவுகளை அறிமுகப்படுத்தியதாக அவர் கூறுகிறார். 

Advertisement

அதன்படி, 'கோவிட் கறி', என்ற அந்த உணவில் வறுத்த காய்கறி பந்துகள் முடிசூடப்பட்ட கொரோனா வைரஸ் போலவும், 'மாஸ்க் நான்' என்பது நான் ரொட்டிகள் முகக்கவசங்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், அந்த கோவிட் கறியில், கூடுதலாக மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன என்றும், அவை மக்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதையும் சேர்த்து அவர் விளம்பரம் செய்வதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு தினமும் கிட்டதட்ட 800 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். அதேபோல், பாதிப்பு எண்ணிக்கை தினமும் 50,000 கடந்து பதிவாகி வருகிறது. 

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் இதுவரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 38,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 

Advertisement