This Article is From Mar 27, 2020

காலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்!

செய்தியாளர்கள் சந்திப்பானது சமூகவலைத்தளங்களான பேஸ்புக், ட்வீட்டரிலும் ஒளிபரப்பப்படும் என ஆர்பிஐ தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

காலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். (File)

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் இன்று காலை 10 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி ட்வீட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு நேற்றைய தினம் அறிவித்த நிலையில் இன்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பானது சமூகவலைத்தளங்களான பேஸ்புக், ட்வீட்டரிலும் ஒளிபரப்பப்படும் என ஆர்பிஐ தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் செய்தியாளர்களை சந்திப்பதை நேரலையில் காண  #rbitoday #rbigovernor யூடியூப்: https://youtu.be/99i3lVow5gQ ட்வீட்டர்: @RBI @RBIsays https://facebook.com/RBISays," உள்ளிட்ட லிங்குகளில் நேரலையில் காணலாம்.

யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என்றார். 

அதன்படி, நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.

பதிவு செய்த 3.5 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க  அவர்களின் நல நிதியை (ரூ .31,000 கோடி) பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.

உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24 சதவீதமாக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும்.

வருங்கால வைப்பு நிதியில் 75% திரும்பியளிக்கத்தேவையில்லாத தொகையை பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பலனடைவர் என கூறினார்.
 

.