மகாராஷ்டிரா மாநிலம் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 51 லட்சத்தினை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 97,894 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 1,132 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 51,18,254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 83,198 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,09,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 40,25,080 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 34.44 சதவிகிதத்தினை இம்மாநிலம் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன.