This Article is From Apr 30, 2020

கொரோனா நெருக்கடி: இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை: ரகுராம் ராஜன்

Coronavirus: ஊரடங்கை நீட்டிப்பது என்பது மிகவும் எளிதானது தான், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானத்தாக இருக்காது என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி: இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை: ரகுராம் ராஜன்

Coronavirus: கொரோனா லாக்டவுன் குறித்து ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி ஆலோசனை

New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ராகுல் காந்தி இன்று பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜனிடம் வீடியோ நேர்காணல் மூலம் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். அப்போது, ஏழைகளுக்கு உதவுவதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என ஹிந்தியில் ராகுல் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்திலே வைத்திருப்பது என்பது மிகவும் எளிதானது தான், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானததாக இருக்காது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றுவதற்கு தற்போது, நமக்கு ரூ.65,000 கோடி தேவை என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும். இதுபோன்று கட்டுபாடுகளை தளர்த்தும்போது, யாரேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.. 

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை குறித்து வல்லுநர்களின் ஆலோசனையை பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் நேர்காணல் ஆகும். 

அண்மையில், அரசின் கொள்கைகளை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்த நிலையில், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற வல்லுநர்களிடமிருந்து ராகுல் காந்தி பாடம் கற்க வேண்டும் என பாஜகவினர் ராகுலை கடுமையாக கேலி செய்தனர். 

தற்போது சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ரகுராம் ராஜன், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 30 நிமிடம் நடந்த இந்த நேர்காணலில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வேறுபாடு குறித்து ரகுராம் ராஜன் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். 

அதிற்கு பதிலளித்த ராகுல், இந்தியாவில், மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை காணப்படுகிறது. அதையே இரு நாடுகளுக்கும்  இடையிலான மிகப்பெரிய வித்தியாசமாக பார்கிறேன் என்று அவர் தெரிவித்தார். 
 

.