This Article is From Mar 25, 2020

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கிறது ரஷ்யா

ஏரோஃப்ளோட்டின் விமானம் எஸ்யூ 5071 புது டெல்லியில் இருந்து காலை புறப்படும் என்று தூதரக தகவல்கள் ஸ்பூட்னிக் நிறுவனத்திடம் தெரிவித்தன.

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கிறது ரஷ்யா

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கிறது ரஷ்யா விமானம்!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கிறது ரஷ்யா
  • எஸ்யூ 5071 புது டெல்லியில் இருந்து காலை புறப்படும்
  • ரோசியாவின் விமானம் FV5672 கோவாவில் இருந்து புறப்படுகிறது.
Moscow:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் டெல்லி மற்றும் கோவாவில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான ரஷ்யர்களை மீட்டுச் செல்ல ரஷ்ய விமானத்தை அனுப்பி வைப்பதாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

"ஏரோஃப்ளோட் விமானம் மார்ச் 24ம் தேதி தாமதமாக ஷெரீமெட்டியோ விமான நிலையத்திலிருந்து புதுடெல்லிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. இது இன்று 350க்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, மார்ச் 25 ஆம் தேதி இன்று ரஷ்யாவில் இருந்து கோவாவுக்கு ஒரு விமானத்தை அனுப்பும்" என்று ரோசாவியாட்சியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோசியாவின் விமானம் FV5672 உள்ளூர் நேரப்படி (காலை 11:45 மணிக்கு கோவாவிலிருந்து புறப்படும் என்று இந்திய ரஷ்ய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

ஏரோஃப்ளோட்டின் விமானம் எஸ்யூ 5071 புது டெல்லியில் இருந்து காலை புறப்படும் என்று தூதரக தகவல்கள் ஸ்பூட்னிக் நிறுவனத்திடம் தெரிவித்தன.

பிருந்தாவன் மற்றும் ரிஷிகேஷ் உள்ளிட்ட வடக்கு நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, மார்ச் 26க்கு முன்னர் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கொரோனா வைரஸ் முடக்கம் காரணமாக சிக்கியுள்ள ரஷ்ய நாட்டினரை ரோசாவியாட்சியா கேட்டுக்கொண்டார். 
 

.