This Article is From Jul 13, 2020

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது ரஷ்ய பல்கலைக்கழகம்!

இந்த தடுப்பு மருந்து கொண்டு பரிசோதிக்கப்பட்ட மனிதர்களின் முதல் குழு புதன்கிழமை மற்றும் இரண்டாவது ஜூலை 20 அன்று வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது ரஷ்ய பல்கலைக்கழகம்!

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

Moscow:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.30 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை மனிதர்களிடையே சோதித்து முடிவுகள் நேர்மறையாக பெற்றுள்ளதாகவும், ரஷ்யாவின் செச்செனோவ் மாஸ்கோ மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மொழிபெயர்ப்பு மருத்துவம் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் தாராசோவ் கூறியுள்ளார்.

செசெனோவ் மாஸ்கோ மாநில மருத்துவ பல்கலைக்கழகம் ஜூன் 18 அன்று ரஷ்யாவின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி தயாரித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது.

இந்த தடுப்பு மருந்து கொண்டு பரிசோதிக்கப்பட்ட மனிதர்களின் முதல் குழு புதன்கிழமை மற்றும் இரண்டாவது ஜூலை 20 அன்று வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஒட்டுண்ணி, வெப்பமண்டல மற்றும் திசையன் மூலம் பரவும் நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் லுகாஷேவ் கூறுகையில், “தடுப்பூசியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“செச்செனோவ் பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டது, இது மருந்துகள் போன்ற முக்கியமான மற்றும் சிக்கலான தயாரிப்புகளை உருவாக்குவதில் பங்கேற்க முடியும்.” என்றும் தாராசோவ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.