Read in English
This Article is From Jul 22, 2020

கொரோனா என்பது நோய் அல்ல, கடவுள் நம் பாவங்களுக்கு வழங்கிய தண்டனை: சமாஜ்வாதி எம்.பி!

மசூதியில் பிரார்த்தனை செய்ய அரசு அனுமதித்தால், அனைவரும் சமூக விலகலை கடைபிடிப்பதுடன், பிரார்த்தனை செய்யும் போது முகக்கவசங்கள் அணிவதையும் உறுதி செய்வோம்.

Advertisement
இந்தியா

கொரோனா என்பது நோய் அல்ல, கடவுள் நம் பாவங்களுக்கு வழங்கிய தண்டனை: சமாஜ்வாதி எம்.பி!(Representational)

Sambhal, Uttar Pradesh:

கொரோனா என்பது நோய் அல்ல, கடவுள் நம் பாவங்களுக்கு வழங்கிய தண்டனை என சமாஜ்வாதி எம்.பி சபீக்கூர் ரகுமான் பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து நாம் வெளியே வருவதற்கான சிறந்த வழி என்பது கடவுளிடம் மன்னிப்பு கோருவது மட்டும் தான் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 19ம் தேதி எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பக்ரீத் பண்டிகையையொட்டி, மக்கள் விலங்குகளை வாங்கிச் செல்ல சந்தைகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பிரார்த்தனை செய்ய மசூதிகள் திறக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸூக்கு எந்த சிகிச்சையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அதாவது கொரோனா வைரஸ் என்பது ஒரு நோய் அல்ல, அது நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனாவுக்கு சிறந்த சிகிச்சை என்னவென்றால், நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

மசூதியில் பிரார்த்தனை செய்ய அரசு அனுமதித்தால், அனைவரும் சமூக விலகலை கடைபிடிப்பதுடன், பிரார்த்தனை செய்யும் போது முகக்கவசங்கள் அணிவதையும் உறுதி செய்வோம். அவர்கள் அனுமதி அளிக்காவிட்டால், நாங்கள் எங்கள் வீடுகளிலிருந்து ஒரு பிரார்த்தனை செய்வோம்.

மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை. ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பதற்கு, அரசு அறிவிக்கும் எந்தவொரு கொள்கையையும் நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement