This Article is From Jul 21, 2020

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றது ஏன்? சுகாதார அமைச்சர் விளக்கம்

தன்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஒரு நாள் முன்பு, தான் தனது மாமனாரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றது ஏன்? சுகாதார அமைச்சர் விளக்கம்

Coronavirus: ஜூன் 17ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

New Delhi:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதாத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்பிய டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள் உலகத் தரம் வாய்ந்தவை என்று தெரிவித்துள்ளார். 

பிளாஸ்மா சிகிச்சையை நிர்வகிக்க அரசு மருத்துவமனையில் அனுமதி பெற தாமதமானதால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஒரு நாள் முன்பு, தான் தனது மாமனாரை இழந்துவிட்டதாகவும், அதனால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக என்டிடிவியிடம் அவர் கூறும்போது, ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் தான் முதலில் அனுமதிக்கப்பட்டேன். அது தனியார் மருத்துவனைகளை விட சிறந்த மருத்துவமனை. எனது நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் எனக்கு பிளாஸ்மா கொடுக்க முடிவு செய்த போது, அதற்கு அனுமதி இல்லை. அதனால், அனுமதி பெறும் வரை நான் காத்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்களும், எனது குடும்பத்தனரும் அதனை ஏற்கவில்லை. 

இதைத்தொடர்ந்து, 10 நாட்களுக்கு பின்னரே அரசு மருத்துவமனைகளும், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்க அனுமதி வழங்கப்பட்டது என்றார். மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு வரை, அவர் தினமும் ஆக்சிஜன் துணையுடன் இருந்ததாகவும், அது இல்லாமல் சில நாட்களுக்கு இருப்பதாலே எனது பணியை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் கூறினார். 

கடந்த ஜூன் 17ம் தேதியன்று, சந்தியேந்தர் ஜெயினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

.