This Article is From Mar 16, 2020

நோய் பரவுகின்ற இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்:நீதிபதி சந்திரசூட்

COVID-19 தொற்றுநோயால் நீதிமன்றங்களை "முழுமையாக நிறுத்த முடியாது" என்று ஞாயிற்றுக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் பரவுகின்ற இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்:நீதிபதி சந்திரசூட்

நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நீதிமன்றம்

New Delhi:

143 நாடுகளில் பரவி உலகெங்கிலும் 5,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் குறித்த பயத்தின் மத்தியில், உச்ச நீதிமன்றம் இன்று "விரைவில் மெய்நிகர் நீதிமன்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் " என்று கூறியதுடன், அடுத்த வாரம் முதல் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கறிஞர்கள் வழக்குகளை வாதிடலாம் என்றும் கூறியுள்ளது.

"நோய் பரவுகின்ற இடமாக நீதிமன்றங்கள் மாறக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறியுள்ளார்.

பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பால் கொரோன வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவித்த பிறகு நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள்,மற்றும் பத்திரிகையாளர்கள் நுழைவதைத் தடைசெய்தது. இன்று காலை, நீதிமன்றத்திற்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன, நோய் பரவுவதைத் தடுக்க வெப்ப பரிசோதனை மூலம் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

"தலைமை நீதிபதி (எஸ்.ஏ. போப்டே) அனைத்து உயர் நீதிமன்றங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். நாங்கள் முதல் கட்டத்தை எடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் எச்சரிக்கைக்குப் பின்பு உச்ச நீதிமன்றம் அவசர வழக்குகளை மட்டும் எடுத்து விசாரிப்பதாக குறிப்பிட்டிருந்தது.

"இந்திய அரசு வழங்கிய ஆலோசனையை மறு ஆய்வு செய்வதிலும், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார நிபுணர்களின் கருத்தையும் கருத்தில் கொண்டு, பார்வையாளர்கள்,  வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் உதவி ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, மாணவர் பயிற்சியாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள், நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது "என்று உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

"இந்த விஷயத்தில் செயல்படப் போகும் வழக்கறிஞர்களைத் தவிர வேறு எந்த நபரும் வாதத்திற்காகவோ அல்லது வாய்வழி சமர்ப்பிப்பதற்காகவோ அல்லது வழக்குரைஞருடன் உதவவோ நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது"

COVID-19 தொற்றுநோயால் நீதிமன்றங்களை "முழுமையாக நிறுத்த முடியாது" என்று ஞாயிற்றுக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அவர் நாளை நீதிமன்ற வளாகத்தை நேரில் பார்வையிடுவார். இந்த கட்டுப்பாடுகளுக்கு ஊடக ஒத்துழைப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

.