Read in English
This Article is From Apr 02, 2020

கொரோனாவிலும் குதூகலமாக இருக்க வழியைக் கண்டுபிடித்த மக்கள்… என்னா டான்ஸு…!

வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 15 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது

Advertisement
விசித்திரம் Edited by

பலரும் மக்களின் வித்தியாசமான யோசனையை வியந்துப் பாராட்டி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கும் பல்வேறு கட்டாப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவால் பலரும் சோர்வடைந்திருந்தாலும், சிலர் குதூகலமாக இருக்கப் புது வழியைக் கண்டடைந்துள்ளார்கள். இங்கிலாந்தின் செஷையர் பகுதியில் உள்ள மக்கள், சமூக விலகியிருத்தலைக் கடைபிடித்து அதே நேரத்தில் ஜாலியாகவும் உள்ளனர். 

தி ஸ்காட்ஸ்மேன் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, செஷையரின் ஃப்ரோட்ஷம் மக்கள் தினமும் வீட்டுக்கு வெளியே டான்ஸ் பார்ட்டி நடத்துகிறார்களாம். அப்பகுதி மக்கள் தினமும் தங்கள் வீட்டுக்கு வெளியே வந்து கூட்டமாக நடனமாடுகிறார்கள். அதே நேரத்தில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையில் அதிக இடைவெளி இருப்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள். 

எல்சா வில்லியம்ஸ் என்பவரால், செஷையர் மக்கள் நடனமாடும் வீடியோ ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது. “இந்த ஊரடங்கின்போது ‘விலகியிருத்தல் நடனத்தை' எங்கள் பகுதி மக்கள் தினமும் 11 மணிக்கு அரங்கேற்றுகிறார்கள்,” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் எல்சா. 
 

வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 15 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. பலரும் மக்களின் வித்தியாசமான யோசனையை வியந்துப் பாராட்டி வருகிறார்கள்.  

எல்சா, “இந்த விலகியிருத்தல் நடனம் என்பது ஒரு நாளைக்கு 10 நிமிடம்தான் நடைபெறுகிறது. அதனால், அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. எங்கள் பகுதியில் நிறைய சிறுவர்களும், வயதானவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாதால், இந்த நிகழ்வை எதிர்நோக்கிப் பார்த்திருப்பார்கள்,” என்கிறார். 

Advertisement
Advertisement