বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 15, 2020

இத்தாலியில் சிக்கித்தவித்த 211 மாணவர்கள் : ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர்

முன்னதாக, ஏப்ரல் 30 வரை குவைத் மற்றும் இத்தாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement
இந்தியா

இத்தாலியில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்களைக் கொண்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம்

Highlights

  • 211 இந்திய மாணவர்களைக் கொண்ட சிறப்பு ஏர் இந்தியா
  • மிலனில் உள்ள இந்திய துணைத் தூதரகம்
  • குறிப்பாக ஏர் இந்தியா குழு மற்றும் இத்தாலிய அதிகாரிகளுக்கு சிறப்பு நன்றி
Milan (Italy):

கொரோனா வைரஸ் உலக முழுதும் பரவி வரும் நிலையில் பல நாடுகளில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்களைக் கொண்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம் கடந்த சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) அன்று இந்தியாவுக்கு புறப்பட்டது.

இந்நிலையில் மிலனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த 211 மாணவர்கள் மற்றும் 7 கம்பாசிநெட் வழக்குகள் கொண்ட நபர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் அழைத்து செல்வதற்கு தனது நன்றிகளை ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக ஏர் இந்தியா குழு மற்றும் இத்தாலிய அதிகாரிகளுக்கு சிறப்பு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வடக்கு இத்தாலியில் உள்ள அனைத்து இந்தியர்களின் நலனையும் தூதரகம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று மிலனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசை தொற்றுநோயாக அறிவித்து, மேலும் ஐரோப்பா தற்போது கொரோனா வைரஸ் பரவளின் மையமாக திகழ்கின்றது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததில் இருந்து இத்தாலியில் தனது மக்களை வெளியேற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் கடந்த சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) கொரோனா வைரஸால் 175 இறப்புகளைப் பதிவுசெய்தது, மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

முன்னதாக, ஏப்ரல் 30 வரை குவைத் மற்றும் இத்தாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களில் இந்தியா பல நாடுகளில் இருந்து தனது மக்கள் வெளியேற்றி வருகின்றது. கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனா, ஜப்பான் மற்றும் ஈரானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்றி வருகின்றது இந்தியா.

Advertisement