முதன்முறையாக சீனாவுக்கு சரக்கு விமானம் இயக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவை தடுக்க மற்ற நாடுகளுக்கு உதவுவதாக சீனா அறிவித்திருந்தது
- சீனாவில் இருந்து மருந்துகளை எடுத்துவர ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்றுள்ளது
- இரவு 8.10 க்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் கொல்கத்தா திரும்புகிறது
New Delhi: ஸ்பைஸ் ஜெட் தனியார் விமான நிறுவனத்தின் சரக்கு விமானம், மருத்துவ உபகரணங்களை பெற்று வர சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. சீனாவில் பல்வேறு மருத்துவ உபகரணங்களைப் பெற இந்தியாவின் சில மாநிலங்கள் கொள்முதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா பாதிப்பு 90 சதவீதத்திற்கும் மேல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்வோம் என சீனா அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக சீனாவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.25-க்கு விமானம் புறப்பட்டுச் சென்று, மதியம் 3.30-க்கு சீனாவின் ஷாங்காய் நகரை அடைந்தது.
மீண்டும் 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கொல்கத்தாவை இரவு 8.10-க்கு சரக்கு விமானம் அடையும். அங்கு சில மருந்து பொருட்களை அளித்து விட்டு, இரவு 9 மணிக்கு புறப்படும் சரக்கு விமானம் ஐதராபாத்துக்கு இரவு 11.10-க்கு வந்தடையு என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக சீனாவுக்கு சரக்கு விமானம் இயக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மேற்கு வங்கத்தில் விளையும் விவசாய பொருட்களை எடுத்துக் கொண்டு ஸ்பைஸ்ஜெட்டின் சரக்கு விமானம் இலங்கைக்கும், மற்ற சரக்குகளை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூருக்கும் சென்றுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்ட மார்ச் 25-ம்தேதிக்குப் பின்னர் தற்போது வரையில் 300 முறை சரக்கு விமானங்களை இயக்கியுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் கூறியுள்ளது. இதன் மூலம் 2,700 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.