This Article is From Jun 09, 2020

“அறிகுறியற்ற கொரோனா நோயாளியிடமிருந்து தொற்று பரவுவது அரிது“: WHO விளக்கம்!

தொடர்பு தடமறிதல் செய்யும் பல நாடுகள் அறிகுறியற்ற நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளன, ஆனால் இவர்கள் மூலமாக வைரஸ் மேலும் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதை கண்டுபிடிக்கவில்லை என்று வான் கெர்கோவ் கூறியுள்ளார். மேலும், இவ்வகையில் தொற்று பரவுவது மிகவும் அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அறிகுறியற்ற கொரோனா நோயாளியிடமிருந்து தொற்று பரவுவது அரிது“: WHO விளக்கம்!

உலகளவில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • More than 1,36,000 cases were reported worldwide on Sunday
  • Brazil has now emerged as one of the hotspots of the pandemic
  • More than 7 million people have been infected with the virus globally
Geneva:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையனது 71 லட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது உலக அளவில் தொற்று பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக WHO கவலை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அமெரிக்காவை பொறுத்த அளவில் தொற்று பரவல் உச்சக்கட்டத்தினை எட்டவில்லையென்றும் WHO குறிப்பிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,36,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் ஆறு மாத காலத்திற்கு தொற்று தடுப்பு நடவடிக்கையிலிருந்து பின் வாங்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா குறித்த கேள்விகளுக்கு, “அந்நாட்டில் தொற்று பாதிப்பை எவ்வாறு சிறப்பாக கையாண்டார்கள் என்பது குறித்து தெரிந்துக்கொள்வதைவிட தற்போது இரண்டாவது முறையாக மேலெழுந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பினை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.“ என்று WHO இன் உயர்மட்ட அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் கூறியுள்ளார். மேலும், மத்திய அமெரிக்கா நாடான குவாத்தமாலா போன்றவற்றில் அதிகரித்து வரும் தொற்று பரவல் எண்ணிக்கை குறித்தும் கவலை தெரிவித்திருந்தார். "இது மிகுந்த அக்கறை கொண்ட நேரம் என்று நான் நினைக்கிறேன், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வலுவான தலைமையும், சர்வதேச ஆதரவும் இந்நேரத்தில் அவசியமாகிறது." என ரியான் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் பிரேசிலை பொறுத்த அளவில், அதிக எண்ணிக்கையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இந்நாடு கொண்டுள்ளது. இத்தாலியை விட அதிக எண்ணிக்கையில் தொற்றால் பாதிக்கப்பட்வர்களை பிரேசில் கொண்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது.

சமீபத்தில் பிரேசில் நாட்டின் தொற்று பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு இணையதளத்திலிருந்து நீக்கியது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெளிவரக்கூடிய தகவல்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு உள்ளன.

இதற்கு முன்பு வரை வந்த புள்ளிவிவரங்கள் விரிவானதாக இருந்தாலும், தொற்று பரவல் மையத்தினை அடையாளம் கண்டு எவ்வாறு அதனை சரிசெய்வது என்பது குறித்து அந்நாட்டவர்கள் புரிந்துக்கொள்வது மிக முக்கியம் என ரியான் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு பின்னர் வரும் தகவல்கள் நிலையானதாக மற்றும் வெளிப்படையாக இருக்கும் என WHO நம்புவதாக ரியான் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தென் அமெரிக்காவில் ஒரு "விரிவான அணுகுமுறை" அவசியம் என்று WHO தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூரில் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என அந்நாட்டு தொற்று தடுப்பு பணிக்குழுவின் இணைத் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். தொடர்பு தடமறிதல் செய்யும் பல நாடுகள் அறிகுறியற்ற நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளன, ஆனால் இவர்கள் மூலமாக வைரஸ் மேலும் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதை கண்டுபிடிக்கவில்லை என்று வான் கெர்கோவ் கூறியுள்ளார். மேலும், இவ்வகையில் தொற்று பரவுவது மிகவும் அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.