Read in English
This Article is From Sep 02, 2020

கொரோனா தொற்று பரிசோதனையில் திடுக்கிடும் மாற்றங்கள்!

பிசிஆர் பரிசோதனைகள் ஆண்டிஜென் பரிசோதனைகளை காட்டிலும் துல்லியமான சோதனை முடிவுகளை கொடுக்க வல்லது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

நாடு முழுவதும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை குறைவான நம்பகத்தன்மை கொண்ட ஆண்டிஜென் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவது என்.டி.டி.வி ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கூடிய நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிசிஆர் பரிசோதனைகளுக்கு பதிலாக பரவலாக தற்போது ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிசிஆர் பரிசோதனைகள் ஆண்டிஜென் பரிசோதனைகளை காட்டிலும் துல்லியமான சோதனை முடிவுகளை கொடுக்க வல்லது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் 98 சதவிகிதம் பிசிஆர் கருவிகள் மூலமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இது சரிபாதியாக குறைக்கப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு பதிலாக ஆண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

அரசு பரிசோதனை புள்ளிவிவரங்களின்படி வெறும் 56 சதவிகித பரிசோதனைகள் மட்டுமே பிசிஆர் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. 2 சதவிகிதமாக இருந்த ஆண்டிஜென் பரிசோதனை முறை தற்போது 44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஆண்டிஜென் பரிசோதனையில் தொற்று உள்ளவர்களுக்கும் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளிவருகின்றன. இந்த சிக்கலை ஐசிஎம்ஆர் கூட உணர்ந்துள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை முறையை அதிகரிக்கும்போது தினசரி தொற்று பதிவாகும் தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Advertisement