நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியதோடு, இந்த சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
கொரோனா சோதனைக் கட்டணத்தில் சீரான தன்மை இருக்க வேண்டும். சில மாநிலங்களில் இது ரூ.2,200 ஆகவும், சில மாநிலங்களில் ரூ.4,500 ஆகவும் உள்ளது. இதற்கான கட்டணத்தை நாங்கள் நிர்ணயிக்க முடியாது. நீங்களே ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அரசிடம் கூறியது.
அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது, இந்த சோதனைகளுக்கான கட்டண வரம்பை மாநிலங்கள் தீர்மானிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். மேலும், "மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது நல்லது, இதனால் குறைந்த கட்டணத்தை பற்றி விவாதிக்கக்கூடும்" என்று அவர் கூறினார்.
எனினும், நீதிமன்ற அமர்வு அவரது கோரிக்கையை நிராகரித்து, "மத்திய அரசு தான் அதிகபட்ச கட்டண வரம்பை நிர்ணயிக்க வேண்டும், என்றும் மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை" என்று கூறினார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா சோதனைக்கான விலை வரம்பை ரூ.2,400ஆக மாற்றியது. இதுவரை சோதனைக்கான அதிகபட்ச வரம்பாக ரூ.4,500 இருந்தது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமானியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அவரது உத்தரவின் அடிப்படையில், அறிவிக்கப்பட்டது.