கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- கடந்த 24 மணிநேரத்தில் 90 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
- சென்னையில் மட்டும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இன்று 90 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பை விட நாளுக்கு நாள் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 54 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணம் அடைந்து இன்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது 908 பேருக்கு மட்டுமே (Active Cases) தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 20 -ஆக அதிகரித்திருக்கிறது. மாநிலத்தில் 3,371 வென்ட்டிலேட்டர்கள் உள்ளன. 29,074 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியாக அதிகபட்சமாக சென்னையில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதற்கடுத்தபடியாக கோவை 134, திருப்பூர் 110, திண்டுக்கல் 80, ஈரோடு 70 ஆகியவை உள்ளன.
இன்று ஈரோடு பெருந்துறையில் 29 பேரும், கோவையில் 27 பேரும், நெல்லையில் 55 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.