This Article is From Mar 30, 2020

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!

Coronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!

Coronavirus: 74 வயது முதியவரின் உடல் தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்
  • அந்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • தூய்மை பணியாளர்கள் முன்னிலையில், அவரது உடல் அடக்கம்
Hyderabad:

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதன் முதலாக 74 வயதான முதியவர் ஒருவர் உயிரிழிந்துள்ளார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

74 வயதான அந்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல், தூய்மை பணியாளர்கள் முன்னிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த செவ்வாய்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். எனினும், இறுதி சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, அந்த முதியவர் உயிரிழந்த பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரது உடலில் வேறு சில பிரச்சினைகளும் இருந்தது என்றார். 

தெலுங்கானாவில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறிய சந்திரசேகர ராவ், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இடம் பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், அவர்களுக்கு மாநில அரசு 12 கிலோ அரிசியும், ரூ500 பணமும், தங்குமிடமும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். 

டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக சாலைகளில் குவிந்ததை தொடர்ந்து, முதல்வர் சந்திரசேகர் ராவ் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகைகளை அறிவித்தார். 

.