கொரோனா வைரஸ்: தெலுங்கானா மாப்பிள்ளை அல்லது மணமகள் அல்லது வேறு யாரும் முகமூடி அணிந்திருப்பதைக் காணவில்லை.
ஹைலைட்ஸ்
- The wedding was held seven days after the groom returned from France
- Uncle of the groom said to be a lawyer and many VIPs attended the wedding
- He has now been quarantined and reception scheduled for Friday called off
Hyderabad: நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த அச்சத்தின் மத்தியில் தெலுங்கானாவின் வாரங்கல் நகரில் வியாழக்கிழமை ஒரு பெரிய திருமணம் நடந்தது. மணமகன் பிரான்சிலிருந்து திரும்பிய ஏழு நாட்களுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், பிரான்சிலிருந்து திரும்பிய மணமகன் இரண்டு வாரத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பிரான்சிலிருந்து மணமகன் வந்த ஏழு நாட்களுக்கு உள்ளாகவே நடைபெற்ற இந்த திருமணத்திற்கு 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மணமகன் தனிமைப்படுத்தலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட வரவேற்பு ரத்து செய்யப்பட்டது.
திருமண விருந்தினர் இந்த நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டதாகவும், மணமகன் அல்லது மணமகள் அல்லது வேறு எவரும் முகமூடிகளை அணியவில்லை. மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவில்லை என்றும் நிகழ்வில் பங்கேற்ற நபர் ஒருவர் கூறினார்.
மணமகன் மார்ச் 12 அன்று ஒரு நண்பருடன் பிரான்சிலிருந்து ஹைதராபாத் திரும்பியிருந்தார். அவர்கள் இருவரும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இருப்பினும், அவர்கள் திருமணத்திற்காக வாரங்கல் சென்றனர்.
மணமகனின் மாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் வி.ஐ.பிகள் ஆவார்கள்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்ட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மக்கள் அதிக அளவில் பங்கேற்கக்கூடி நிகழ்வுகளை ரத்து செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழா குறித்து நிருபர் ஒருவர் ட்வீட் செய்தவுடன், தெலுங்கானா நிர்வாகம் பதிலளித்துள்ளது. திருமணத்தை நடத்துவது ஒரு பெரிய பொதுச் சுகாதார ஆபத்து என்று கூறினார் என்று அந்த நிருபர் குறிப்பிட்டிருந்தார்0.
இந்தியாவுக்கு வெளியிலிருந்து திரும்பும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு, தெலுங்கானா நிர்வாகம் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்கியுள்ளது. வசதிகள் போதுமானதாக இல்லை என்று பலர் புகார் கூறியதால், அவர்களில் பலர் சுய-தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளை உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இருப்பினும், பல வீடியோக்களை அரசு நடத்தும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் உள்ளவர்கள் பகிர்ந்துள்ளனர், அவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என்று புகார் கூறுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் பராமரிக்கப்படவில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெர்மனியிலிருந்து திரும்பிய சைதன்யா என்ற இளைஞன் என்ற இளைஞனை ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் வைக்கப்பட்டதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்றும் அந்த இளைஞர் புகார் கூறியிருந்தார்.
"எங்கள் பாஸ்போர்ட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன, நாங்கள் குற்றவாளிகளா? அரசாங்கத்தால் வசதிகள் வழங்க முடியாவிட்டால் நாங்கள் ஏன் பேருந்துகளில் அடைக்கப்பட்டு இந்த மையங்களில் இறக்கப்பட்டோம்?" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டவர்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆர்ப்பாட்டங்களும், அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்தன.
தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவோம் என்று சுய அறிவிப்பு அளித்த பின்னர் மக்கள் வீடு செல்ல மாநில நிர்வாகம் அனுமதித்து வருகிறது.
ஆனால், என்.டி.டி.வி சாய் சைதன்யாவுடன் தொலைப்பேசியில் பேசியபோது, அவரும் மற்றவர்களும் வியாழக்கிழமை இரவு வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதா கூறினார். ஆனால் தொலைப்பேசியில், ஒரு பெண்ணின் குரலையும் ஒரு குழந்தையின் அழுகையையும் நாங்கள் கேட்க முடிந்தது, தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு முரணாக உள்ளதைக் குறிக்கிறது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அதே பகுதியில், அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விருப்பம் வழங்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சுய தனிமைப்படுத்துதல் என்பது பொதுச் சமூகத்திற்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
மாநில நிர்வாகம் தொற்று பரவல் குறித்த சவால்களைப் பற்றிக் கவலைப்படுவதோடு, வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பவர்களைக் கண்காணிக்கக் குழுக்களை அனுப்புகிறது. ஒரு மூத்த அதிகாரி மற்றும் ஒரு மருத்துவ அதிகாரி என, தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை மருத்துவ பரிந்துரைகளை பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கும், பாதிப்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகளைப் புகாரளிப்பதற்கும் இவர்கள் சோதனைகளை மேற்கொள்கின்றனர்.