This Article is From May 22, 2020

இந்தியாவில் 2 மாதங்களில் 100 மடங்காக அதிகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 3.32 லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 15.8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 3.17 லட்சம் பேரும், பிரேசிலில் 3.10 லட்சம்பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 2 மாதங்களில் 100 மடங்காக அதிகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை!

உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது.

New Delhi:

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் 100 மடங்காக கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சரியாக 115 நாட்களுக்கு முன்பு ஜனவரி 24-ம்தேதிதான் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய சூழலில் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இன்றைய சூழலில், நாடு முழுவதும் 555 ஆய்வகங்கள் கொரோனா சோதனையை மேற்கொண்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மாதிரிகள் வரை சோதிக்கப்படுகிறது. 

பிப்ரவரியில் 4  ஆய்வகங்கள் மட்டுமே செயல்பட்டன. அன்றைய தினம் ஆயிரம் பேர் வரையில் சோதிக்கப்பட்டார்கள். 

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் மொத்தம் 25 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் அதே நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 16 ஆயிரம் பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் மொத்தம் 1.18 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். 

பரிசோதனைகளை அதிகரிப்பதால் கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சோதனைகள் நடந்து வருகின்றன. 

மத்திய அரசு 150 விமானங்கள் மூலமாக 40 டன் அளவுக்கு பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறது. இவை 16 இடங்களில் வைக்கப்பட்டு அங்கிருந்து பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. 

இதற்கிடையே உள்நாட்டில் 3 நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு SWAB சோதனை நடத்தும் 2 லட்சம் கிட்டுகளை உற்பத்தி செய்கின்றன. மற்றொரு தனியார் நிறுவனம் ஒரு கோடி பி.சி.ஆ. கிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது. 

இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர். கூறுகையில், 'பரிசோதனை கருவிகளை சொந்தமாக தயாரிக்கும் அளவுக்கு இந்தியா திறன் கொண்டதாக மாறியுள்ளது. உயிர்களை காக்க 24 மணிநேரமும் போராடிக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 3.32 லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 15.8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 3.17 லட்சம் பேரும், பிரேசிலில் 3.10 லட்சம்பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. 

.