சென்னைத் தெருக்களில் வலம் வந்த இந்த ரோபோக்களைப் பார்த்த பலர், இந்த புது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரத்தை சானிடைஸ் செய்ய கொரோனா வைரைஸ் போன்ற ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள கன்டெயின்மென்ட் பகுதிகளில் சானிடைஸ் செய்யும் பணிகளில் ஈடுபட இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ரோபோக்களின் வடிவமைப்பாளரான கவுதம், “இந்த ரோபோக்கள் சுமார் 30 லிட்டர் கிருமி நாசினிகளை வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. இது ஆரம்பம்தான். இதைவிட சிறந்த ரோபோக்களை உருவாக்கி வருகிறோம்” என்று கூறுகிறார்.
சென்னைத் தெருக்களில் வலம் வந்த இந்த ரோபோக்களைப் பார்த்த பலர், இந்த புது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். ரோபோக்களை எடுத்துச் செல்லும் வாகனமும் கொரோனோ வைரஸைப் போன்றே உள்ளது.
கடந்த மார்ச் மாதம், இந்திய அளவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு முடக்க நடவடிக்கை அமல் செய்யப்பட்டது. அப்போது சென்னையில் வெளியில் வரும் நபர்களைத் தடுத்து விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கில் சென்னை காவல் துறையினர், ‘கொரோனா ஹெல்மட்' அணிந்தனர். வெளியில் வந்தால் கொரோனா தொற்று ஏற்படும் என்பதை அவர்கள் அதன் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தினர்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான, விசித்திர ரோபோக்கள் நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
Click for more
trending news