हिंदी में पढ़ें Read in English
This Article is From May 19, 2020

ஊரடங்குக்கு மத்தியில் மதத் தலைவர் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அனைவராலும் அழைக்கப்படுபவர். நேற்று முன்தினம் நுரையிரல் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழந்தார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் ராணா மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் சஞ்சய் பதக் ஆகியோரால் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

Advertisement
இந்தியா Edited by

ஊரடங்குக்கு மத்தியில் மதத் தலைவர் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Highlights

  • Dev Prabhakar Shastri, 82, died on Sunday from lung, kidney ailments
  • Congress, BJP members, actor Ashutosh Rana attended funeral at Katni
  • "Social distancing was maintained," said Katni District Collector
New Delhi:

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மதத் தலைவரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் காங்கிரஸ், பாஜக கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும், ராணா போன்ற நடிகர்களும் கலந்துகொண்டனர். எனினும், மாவட்ட நிர்வாகம் அங்கு எந்த விதிமுறை மீறலும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது. 

மதத் தலைவர் தேவ் பிரபாகர் சாஸ்திரி 82, தாதா ஜி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். நேற்று முன்தினம் நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழந்தார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் ராணா மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் சஞ்சய் பதக் ஆகியோரால் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டார். 

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சாலைகளில் நடந்து செல்கின்றனர்.


எனினும், காத்னி மாவட்ட ஆட்சியர் சாஷி பூஷன் சிங் கூறும்போது, அங்கு எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார். 

Advertisement

மத்திய பிரதேச முதல்வர் சிவராஷ் சிங் செளகான், பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, காங்கிரஸ் எம்.பி கமல்நாத் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு முதன் முதலாக அறிவித்ததில் இருந்து கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதனிடையே, மத்திய அரசு ஊரடங்கை மே.31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கான அதன் நெறிமுறைகளில் 20 பேருக்கு மேல் இல்லாத அளவில் இறுதிச்சடங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 

Advertisement