This Article is From May 15, 2020

'மும்பைக்கு இனிமேல் திரும்பி வரவே மாட்டோம்' - வெளி மாநில தொழிலாளர்கள் குமுறல்!

ஆயிரக்கணக்கானோர் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விடுகிறார்கள். சிலருக்கு செல்லும் வழியில் நோய் ஏற்பட்டு விடுகிறது. சிலர் விபத்தால் உயிரிழக்கிறார்கள். 

'மும்பைக்கு இனிமேல் திரும்பி வரவே மாட்டோம்' - வெளி மாநில தொழிலாளர்கள் குமுறல்!

நேற்றைய நிலவரப்படி சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். 

Mumbai:

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் கூடியுள்ளனர். அவர்களில் பலர் தாங்கள் மீண்டும் மும்பைக்கு திரும்பி வர மாட்டோம் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல 'ஷிராமிக்' என்ற சிறப்பு ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மும்பையில் உள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்திற்கு திரும்பி செல்வதற்கு தயாராகி உள்ளனர்.

இந்த 2 மாநிலங்களில் இருந்து சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கட்டிட தொழில்களுக்காக மகாராஷ்டிராவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசிடம் பதிவு செய்திருக்கிறார்கள். 

வெளி மாநில தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'நான் மே 5-ம்தேதி பதிவு செய்தேன். நான் பீகாரின் பாட்னாவுக்கு போகிறேன்' என்றார். 

கொரோனா பாதிப்பால் வெளி மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. அவர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. 

மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளி ஒருவர் NDTVக்கு அளித்த பேட்டியில், 'நான் இனிமேல் மும்பைக்கு திரும்பி வரவே மாட்டேன். இங்கு பல பிரச்னைகள் எனக்கு ஏற்பட்டன. அரசு எங்களை கைவிட்டு விட்டது. நாங்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான பணம் மட்டும் எங்களுக்கு போதும். நாங்கள் சொந்த ஊரிலேயே இருந்து கொள்வோம்' என்று தெரிவித்தார். 

வேலை வாய்ப்பின்மை இல்லாததால், பசிக் கொடுமை காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 

ஆயிரக்கணக்கானோர் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விடுகிறார்கள். சிலருக்கு செல்லும் வழியில் நோய் ஏற்பட்டு விடுகிறது. சிலர் விபத்தால் உயிரிழக்கிறார்கள். 

போதுமான அளவுக்கு பேருந்து, ரயில்கள் இயக்கப்படாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் நெருக்கடி காரணமாக வெளி மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். 

நாட்டின் நிதி மற்றும் பொழுதுபோக்கின் தலைநகரமான மும்பையில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 655 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

.