বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 11, 2020

டோலிசுமாப் மருந்தினை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவின் drug regulator இடோலிசுமாப் ஒப்புதல் அளித்துள்ளது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 22 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தடிப்புத் தோல் அழற்சியைக் குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பயோகானின் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்தான மோனோக்ளோனல் ஆன்டிபாடி ஊசி இடோலிசுமாப், மிதமான சைட்டோகைன் சிகிச்சைக்கு தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக இருந்து வந்தது. இந்நிலையில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான சுவாசக் பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கும் இம்மருந்தினை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து  கட்டுப்பாட்டு ஜெனரல் டாக்டர் வி.ஜி. சோமானி தெரிவித்துள்ளார். மேலும், நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் வல்லுநர்கள் மற்றும் எய்ம்ஸின் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் திருப்திகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏற்கனவே பல ஆண்டுகளாக தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயோகானின் அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement