கொனேரு கொனப்பாவை மாநில சுகாதார அதிகாரிகள் அவரது சட்டசபை தொகுதிக்கு செல்ல அனுமதித்தனர்.
Telangana: இந்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய தெலுங்கானாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தின் மத்தியில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றாததால் ஆசிபாபாத் மாவட்ட ஆட்சியர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் எம்.எல்.ஏ., கொனேரு கொனப்பா, அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகக் கூறிக்கொண்டு ரயிலில் பயணம் செய்து, ஒரு சமூக விழா மற்றும் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ காகஸ்நகர் நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் உரையாடி உள்ளூர் கோவிலில் நடந்த ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டனர்.
சிர்பூர்-ககாஸ்நகரைச் சேர்ந்த அரசியல்வாதியாகிய கொனேரு கொனப்பாலும் அவரது மனைவியும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பினர். திரும்பிய பிறகு, அவர்கள் தங்களை தங்கள் வீட்டிற்குள் அடைத்துக்கொள்வார்கள் என்று கூறி ஒரு சுய அறிவிப்பு படிவத்தில் கையெழுத்திட்டனர். இருப்பினும், அடுத்த நாள், அவர் தெலுங்கானா எக்ஸ்பிரஸில் செகந்திராபாத்திலிருந்து ககாஸ்நகர் நகரத்திற்குப் பயணம் செய்தார்.
காகஸ்நகர் ரயில் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ கைகுலுக்கிக் கொண்டிருந்தார்.
அரசாங்கம் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் எம்.எல்.ஏ.வின் வெளிநாட்டுக்கு பிந்தைய பயணங்கள் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை "மக்கள் ஊரடங்கு உத்தரவு" கோரியதை அடுத்து, , இந்திய ரயில்வே சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களையும் ரத்து செய்தது. பாஜக தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங்குடன், பாடகியான கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின்பு, தனிமையில் சென்றுள்ளார். பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 258 ஐ தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 63 வழக்குகள் பதிவாகியுள்ளன. பிரதமர் மோடியின் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, இந்த மையம் சர்வதேச விமானங்களுக்கான எல்லைகளையும் மூடியுள்ளது மற்றும் விசாக்களை நிறுத்தியுள்ளது, அதே நேரத்தில் பல மாநிலங்கள் பொது இடங்களை மூடி, மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.