বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 13, 2020

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா பாசிட்டிவ்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

COVID-19 cases in Noida: மருத்துவர்கள் ஆய்வு செய்ததற்கு பின்னர் விளக்கமான அறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • Both the patients tested negative twice in a span of 24 hours
  • They were readmitted after a third round of tests showed positive results
  • Uttar Pradesh has so far seen 483 cases of coronavirus
Noida :

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால், மருத்துவமனையிலிருந்து அவர்கள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனினும், மூன்றாவதாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்தால், அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நொய்டாவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவருக்கும், 24 மணி நேரத்தில் 2 முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனினும், அவர்களிடமிருந்து 3வது முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் அவர்களுக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. 

இதுதொடர்பாக, மருத்துவர்கள் உரிய ஆய்வு செய்ததற்குப் பின்னர் விளக்கமான அறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

உத்தரப் பிரதேசத்தின் கெளதம புத்தா நகரில், உள்ள நொய்டா பகுதியில் அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் உறுதியாகி உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்தில் கெளதம புத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்டு, ஏப்.15ம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, கெளதம புத்தா நகரில் இந்த மாத இறுதி வரை கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Advertisement