Read in English
This Article is From Mar 14, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement
இந்தியா Written by

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டு குடிமகன். 

இந்த 81 பேருடன் தொடர்பிலிருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை கண்டுபிடித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் சுமார் 4 ஆயிரம் பேரின் உடல்நிலை ஆய்வு செய்யப்படுகிறது. 

Advertisement

கொரோனா பாதித்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் 42,296 பயணிகளிடம் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதில் 2,559 பேருக்கு கொரோனா தாக்கியதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அவர்களில் 17 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 522 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். 

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேபோன்று, கொரோனா அதிகம் தாக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், இந்தியர்கள் சிலர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானத்தை அனுப்பவுள்ளது. நாளை மதியம் இத்தாலிக்குச் செல்லும் விமானம் இந்தியர்களை மீட்டு ஞாயிறன்று காலை டெல்லி திரும்பும் என்று விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

மாலத்தீவுகள், மியான்மர், வங்கதேசம், அமெரிக்கா, மடகாஸ்கர், நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு உள்ளிட்ட 48 நாடுகளிலிருந்து 1,031 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. 

Advertisement