This Article is From Aug 20, 2020

மத்திய நீர் வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

முன்னதாக ஷெகாவத் செவ்வாயன்று சட்லஜ் மற்றும் யமுனை நதி இணைப்பு தொடர்பாக ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நீர் வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறாவது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஆவார்

ஹைலைட்ஸ்

  • நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்க்கு கொரோனா
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறாவது மத்திய அமைச்சர் சேகாவத்
  • தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள கோரிக்கை
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில்,  நாட்டின் அரசியல் தலைவர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் தற்போது கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறாவது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஆவார். 52 வயதான சேகாவத், தனக்கு கொரோனா தொற்றுக்கான சில அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து பரிசோதித்ததில் கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் டிவிட் செய்துள்ளார்.

ஆயுஷ் அமைச்சர் ஷிர்பாத் நாயக், மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், லாவ் அகர்வால் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது சேகாவத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும், இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இன்று காலை கிட்டத்தட்ட 70,000 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஷெகாவத் செவ்வாயன்று சட்லஜ் மற்றும் யமுனை நதி இணைப்பு தொடர்பாக ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.