Read in English
This Article is From Mar 18, 2020

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரையிலான மாணவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் அடுத்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று உத்தரப்பிரதேச அரசு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா

கொரோனா வைரஸ்: 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி என உ.பி. அரசு அறிவிப்பு

Lucknow:

கொரோனா வைரஸ் வெடிப்பைக் கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரையிலான மாணவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் அடுத்த வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று உத்தரப்பிரதேச அரசு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடக்க பள்ளிகளில் தேர்வு மார்ச் 23 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்தது.

"அடிப்படை கல்வித் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பரீட்சை இல்லாமல் அனைத்து மாணவர்களையும் தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனைத்துப் பள்ளிகளும் கொரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் 2 வரை மூடப்பட்டுள்ளன" என்று கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் தெரிவித்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநில அரசு செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமாக்கள், மலிட் பிளெக்ஸ் மற்றும் சுற்றுலா இடங்களை மூடுவதை ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் போட்டி மற்றும் பிற தேர்வுகளும் ஏப்ரல் 2 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement