தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- மொத்தம் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 485-ல் 422 பேர் டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்
தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 485-ஆக உயர்ந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட 485 பேரில், 422 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். மற்றவர்களின் எண்ணிக்கை 63-ஆக உள்ளது.
புதியதாக பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் மார்ச் 21-ம்தேதி 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை மார்ச் 31-ல் 124 ஆகவும், ஏப்ரல் 1-ல் 234 ஆகவும், ஏப்ரல் 2-ல் 309 ஆகவும், நேற்று 411 ஆகவும், இன்று 485-ஆகவும் உயர்ந்திருக்கிறது.
இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மார்ச் 24-ம்தேதி இண்டிகோ 6E -2403 மற்றும் ஏர் ஏசியா I5 - 765 ஆகிய 2 விமானங்களில் பயணித்தவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பீலா ராஜேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 3-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை - 90,541 ஆகவும், 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 5,312 ஆகவும் உள்ளது.