Read in English
This Article is From Sep 16, 2020

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது!

இதுவரையில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

Advertisement
இந்தியா Posted by

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 1290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நாளில் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது.

அதாவது மொத்தம் 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் உள்ளனர்.  ஒரே நாளில் 1290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மகராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரேதச மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Advertisement