This Article is From Apr 29, 2020

தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 94 பேருக்கு பாதிப்பு

இன்றைய நிலவரத்தை கணக்கிடும்போது ஒட்டுமொத்த பாதிப்பில் 90 சதவீதம் சென்னையில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 94 பேருக்கு பாதிப்பு

இன்று மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 82 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • சென்னையில் மட்டும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • சென்னையில் தாறுமாறாக பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 104 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 94 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,162 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 3-ம்தேதியான எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 82 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1,210 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 94 பேருடன் மொத்தம் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 35 சதவீதம் ஆகும். 

.