This Article is From May 19, 2020

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா! சென்னையில் பாதிப்பு 550-யை தாண்டியது

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தவிர்த்து விமான நிலைய தனிமைப்படுத்துதலில் 36 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா! சென்னையில் பாதிப்பு 550-யை தாண்டியது

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 688 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தவிர்த்து விமான நிலைய தனிமைப்படுத்துதலில் 36 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக ஏற்பட்ட பாதிப்புடன் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 12,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 7,672 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் குணம் அடைந்தவர்கள், உயிரிழப்புகளை தவிர்த்துமொத்தம் 5,691 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்று மட்டும் 10,333 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 407 பேர் ஆண்கள், 281 பேர் பெண்கள் ஆவர். 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 40 அரசு மற்றும் 23 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இன்று 489 பேர் உள்பட மொத்தம் 4,895 பேர் சிகிச்சை குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 84 ஆக அதிகரித்திருக்கிறது. 
 

.