This Article is From Apr 18, 2020

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை தயாரிக்கும் இந்தியா!

இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) ஒப்புதலுடன், மைக்கோபாக்டீரியம் தடுப்பு மருந்து கொரோனா தொற்றினை எதிர்த்து செயல்பட உதவுமா என்கிற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள்

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை தயாரிக்கும் இந்தியா!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000ஐ கடந்திருக்கின்றது.

ஹைலைட்ஸ்

  • The vaccine has proved effective against leprosy, boosts immunity
  • US and China too are working on vaccines to counter coronavirus
  • COVID-19 has killed 437 people in India; over 13,000 are infected
New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்திய விஞ்ஞானிகள் தொழுநோய்க்கு எதிராக பயன்படுத்தப்படும் மைக்கோபாக்டீரியம் தடுப்பு மருந்து Mw vaccine, இந்த மருந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயன்படுமா என்கிற ஆராய்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஈடுபட்டு வருகிறது.

1966 காலகட்டங்களில் காசநோய்க்கு உருவாக்கப்பட்ட பி.சி.ஜி (BCG) தடுப்பு மருந்தின் நெருங்கிய தொடர்புடையதுதான் இந்த மைக்கோபாக்டீரியம் தடுப்பு மருந்தாகும். தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) ஒப்புதலுடன், மைக்கோபாக்டீரியம் தடுப்பு மருந்து கொரோனா தொற்றினை எதிர்த்து செயல்பட உதவுமா என்கிற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள் என சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே, கூறியுள்ளார்.

மேலும், “இந்த வகையில் தடுப்பூசி கண்டறிவது என்பது ஒரு நீண்ட கால செயல் முறை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்னும் இரண்டு ஒப்புதல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை கிடைத்தவுடன், சோதனைகளை தொடங்குவோம். இதற்கான முடிவுகளை அடுத்த ஆறு வாரங்களுக்குள் கண்டறிவோம்.” என்று மண்டே கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கிட்டதட்ட 1.5 லட்சம் மக்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தினை கண்டறிய  குறைந்தப்பட்டம் 12 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் கனித்திருந்தது. தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் சீனா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

வைரஸின் தோற்றம் மற்றும் பரவலைக் கண்டறிய உதவும் மரபணு வரிசைப்படுத்துதலில் இந்தியா செயல்பட்டு வருவதாக மாண்டே கூறியுள்ளார்.  மேலும், இம்மாதிரியான மரபணு வரிசைப்படுத்துதலில் புனேவில் உள்ள என்.ஐ.வி (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி) 25 வரிசை முறைகளைச் செய்துள்ளது. தற்போது வரை எங்கள் இரண்டு ஆய்வகங்களில் 30 வரிசை முறைகளைச் செய்துள்ளோம். இனி வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை 500 முதல் 1,000 வரை அதிகரிக்கும் என மாண்டே குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கொரோனா வைரஸ் ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவான மனித கொரோனா வைரஸ்கள்
  • 229 இ (ஆல்பா கொரோனா வைரஸ்)
  • என்.எல் 63 (ஆல்பா கொரோனா வைரஸ்)
  • OC43 (பீட்டா கொரோனா வைரஸ்)
  • HKU1 (பீட்டா கொரோனா வைரஸ்)
பிற மனித கொரோனா வைரஸ்கள்
  • MERS-CoV (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியை ஏற்படுத்தும் பீட்டா கொரோனா வைரஸ் அல்லது MERS)
  • SARS-CoV (கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி அல்லது SARS ஐ ஏற்படுத்தும் பீட்டா கொரோனா வைரஸ்)
  • SARS-CoV-2 (கொரோனா வைரஸ் நோயை ஏற்படுத்தும் நாவல் கொரோனா வைரஸ் 2019, அல்லது COVID-19)

என இவை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் “நாங்கள் அதிக வரிசை முறைகளைச் செய்யும்போது தடுப்பூசியினைக் கண்டுபிடிப்போம்" என்று டாக்டர் மாண்டே கூறினார்.

.